தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை:
மேலும், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 23 ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்பதாலும் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.