தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கின்றனர். மநீம-சமக-ஐஜேகே-குடியரசு கட்சி- ஆம் ஆத்மி- காந்திய மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 3 வது அணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணி போல இந்த தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுவதால் தேர்தலில் பரபரப்பு உருவாகியுள்ளது.