பிக்பாஸ் 3 போட்டியாளர் சாண்டி மாஸ்டர் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் தற்போது நுழைந்துள்ளார்.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சில காரணங்களால் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் தீனா நேற்று உள்ளே நுழைந்தார். இதனையடுத்து தற்போது இன்று பிக்பாஸ் 3 போட்டியாளர் சாண்டி மாஸ்டர் இந்த நிகழ்ச்சியில் தற்போது நுழைந்துள்ளார். இதற்கான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.