Categories
சினிமா தமிழ் சினிமா

வரிசை கட்டி நிற்கும் படங்கள்…. அடுத்தடுத்த ஒப்பந்தமாகும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான பட்டியல்….!!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் வாசி எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஆதி திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர அவர் மலையாளத்தில் நடித்த அரபிக் கடலின் டே, தெலுங்கில் நடித்த குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Categories

Tech |