கனடாவில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதர்காக தடுப்பூசிகளும் போடப்பட்டுவருகிராட்.இதே போன்று கனடாவிழும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் டொராண்டோ நகரில் வசிப்பவர் ஒருவருக்கு பிரேஸிலில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உருமாறிய வைரஸ் முன்பிருந்த வைரஸை விட மிகவும் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.