அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார்.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் இன்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்து , முசுறியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கலந்து கொள்ளும் வகையில் நேற்றே ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். இந்நிலையில் அமமுக_லிருந்து நீக்கபட்ட வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்தார்.ஏற்கனவே அமமுக செந்தில் பாலாஜி , அதிமுக_வின் ராஜகண்ணப்பன் ஆகியோர் திமுக_வில் இணைந்ததனர். இதனால் அதிமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் இருந்து வருவதாக தெரிகின்றது.