முழு ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் நிறுவன ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் பணியிடங்களுக்கு வந்து செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பித்தது உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 7ஆம் தேதி இந்த ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதில் சில தளர்வுகள் உள்ளதாக அறிவித்திருந்தது.
அதன்படி முழு ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் நிறுவன ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் தங்களது பணியிடங்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விட்டு இருசக்கர வாகனத்தில் பணியிடங்களுக்கு சென்றுவர அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.