ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்த பிரியங்கா மோகனின் அடுத்த படத்திற்கான ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்குத் திரையுலகில் நானி நடிப்பில் வெளியான படம் கேங்லீடர். இப்படத்தில் முதல்முறையாக பிரியங்கா மோகன் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் பிரியங்கா கனவுக்கன்னியாக இடம் பிடித்தார். அதன் பிறகு அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோக்கள் மிகவும் வைரலாக பரவி வந்தது.
இதைத்தொடர்ந்து அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படம் மார்ச் வெளியாக உள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்னரே பிரியங்கா அடுத்த இரண்டு தமிழ்ப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அதில்,சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா40 படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நான் படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் பிரியங்கா நடிப்பில் உருவாகியுயுள்ள ஸ்ரீகரம் என்ற படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.