‘வலிமை’ படத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ எனும் திரைபடத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் எஞ்சியுள்ள காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து வலிமை படத்திற்கான அடுத்தகட்ட வேலைகளை பட குழுவினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வலிமை படத்தின் CGI பணிகள் நடந்து வருவதாகவும், சண்டை மற்றும் ஸ்டன்ட் காட்சிகள் மாஸாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.