தமிழ் சினிமாவில் மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா சில நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியதால் மக்கள் அச்சமின்றி இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா மீண்டும் படை எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் திரை பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல நடிகர் அமீர்கான், மாதவன் உள்ளிட்டோருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அவர் யார் என்றால், அற்புத தீவு, தலை எழுத்து, 7 ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பக்ரு.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமன்றி மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தான் தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இப்போது உடல் நலம் குணமாகி விட்டேன். ஆனால் கொரோனா இருப்பதால் என்னை நானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்கிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன். நீங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன், முக கவசம் அணிந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.