Categories
மாநில செய்திகள்

“அடுத்த டார்கெட் எடப்பாடி” விரைவில் நடக்கும் ரெய்டு….. வசமாக சிக்கிய காண்ட்ராக்டர்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது டெண்டர் எடுத்த அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்திய போது கூட இவ்வளவு சிக்கவில்லை என்று வருமான வரித்துறையினர் கூறுகிறார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பாண்டித்துரை தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்ட சில பல ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்த சமயத்தில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமான அனைத்து டெண்டர்களையும் பாண்டித்துரைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளுக்கான டெண்டரும் பாண்டித்துரைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த டெண்டர் மூலம் அந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் லாபம் பார்த்ததாகவும், அதில் ஒரு பகுதியை மேல் இடத்திற்கு கொடுத்ததாகவும் தெரிவிக்கப் படுகிறது. இதனால்தான் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புடைய இடங்களில் அடுத்ததாக ரெய்டு நடக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |