அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து விலங்குக்கு பரவியுள்ளது இதன் தாக்கத்தை உணர்த்துகின்றது.
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. அங்கு 336,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69,424- பேர் உயிரிழந்துள்ளனர்.
மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டன. ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் இருக்கும் புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வந்த பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விலங்குகளுக்கு பரவாது என்ற கூற்று பொய்யாக்கப்படுள்ளது. அந்த பூங்காவில் பணியாற்றியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் மூலமாக பெண் புலிக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவிக்கையில், மேலும் சில புலிகளுக்கு வறட்டு இருமல் அறிகுறிகள் இருக்கின்றது. புலிகள், சிங்கங்களிடம் வைரஸ் எப்படி இருக்கும் என தெரியவில்லை, இருந்தாலும் இங்குள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தது.