பிரித்தானியாவில் மருத்துவமனைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக NHS தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையின் வழங்குநர்களின் (NHS Providers) தலைமை நிர்வாகி கிறிஸ் ஹாப்சன் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையை சுட்டிக்காட்டி அங்கு கிட்டத்தட்ட 40 மகப்பேறு உதவியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டனர் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அந்த மகப்பேறு பிரிவு மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோலவே பிரித்தானியாவில் பல மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் தடுப்பூசி செலுத்து கொள்ளாமல் உள்ளனர். எனவே இந்த நிலைமை நீடித்தால் நோயாளிகளின் சேவையில் பாதிப்பு ஏற்படுவதோடு அவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கிறிஸ் ஹாப்சன் எச்சரித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 94,000 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பராமரிப்பு மற்றும் சுகாதார ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான உத்தரவு வருகின்ற 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.