சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 783 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 683ல் இருந்து 701ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 119 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 14 நாட்களாக நோய் தோற்று அறிகுறி இல்லாத 33 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் விலக்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.