Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 455ஆக இருந்த நிலையில் தற்போது 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 101 தெருக்கள், கோடம்பாக்கம் 22 தெருக்கள், திருவிக 94 தெருக்கள், அண்ணா நகர் 13 தெருக்கள், தேனாம்பேட்டை 62 தெருக்கள், வளசரவாக்கம் 51 தெருக்கள் என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் – 571 , கோடம்பாக்கம் – 563, திரு.வி.க நகரில் – 519, அண்ணா நகர் – 248, தேனாம்பேட்டை – 360, தண்டையார் பேட்டை – 231 பேர்கள் என இந்த மண்டலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |