சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 712 அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட புதிய தெருக்களில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 14 நாட்களாக நோய் தொற்று கண்டறியாத 46 தனிப்படுத்திய பகுதிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையானது 701ல் இருந்து 655ஆக குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக 40க்கும் மேற்பட்ட தெருக்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையானது 712 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் மயிலாப்பூரில் உள்ள பிஎம்கே கார்டன் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேகே நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட ஒரே சேர்த்த 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை சுற்றியுள்ள சின்மயா நகர், பிருந்தாவனம் நகர், தெற்கு மாட வீதி உள்ளிட்ட பகுதிகளில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளிலும் 20கும் மேற்பட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிகேணி, சைதாப்பேட்டை, சவுகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் அதிக நோய் தொற்று உள்ளது. வியாசர்பாடி, கொடுங்கையூர் , மாதவரம் எம்சிஜி அவென்யூ, பெரம்பூர் ஜி .எம் காலனியில் அதிக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.