நாகப்பட்டினத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அதேசமயம் நேற்று 12 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 372 ஆக உள்ளது. தற்போது 305 பேர் நாகை மாவட்டத்தில் மட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.