Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 80 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

திரு.வி.க நகர் மண்டலத்தில் 70 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டையில் 38 பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 32 பகுதிகள், தேனாம்பேட்டையில் 37 பகுதிகள் என மொத்தம் 357 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |