குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தினமும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது.
இந்த நிலையில் குஜராத்தில் மேலும் 25 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல குஜராத்தில் 75 வயது முதியவர் கொரோனாவால் இன்று உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிதுள்ளது.
முன்னதாக இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529லிருந்து 8,356ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 242லிருந்து 273 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 653லிருந்து 716ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது