Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் 35 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதில், மதுரையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவர் ஆவர். மேலும் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தவருடன் தொடர்பில் இருந்த இருவருக்கும், சென்னையை சேர்ந்த இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளது.

 

Categories

Tech |