இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.
கேரளா – 17, மகாராஷ்டிரா-11, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – (வெளிநாட்டினர் -14), ஆந்திரா – 1 என மொத்தம் 75 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Ministry of Health and Family Welfare, Government of India: Total number of confirmed COVID-19 cases across India (including foreign nationals) is 75. pic.twitter.com/Evk0B8cYXR
— ANI (@ANI) March 13, 2020
பெங்களூருவில் இருக்கும் கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கூகுள் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 4,627 ஆக இருந்த நிலையில் இன்று 4,900க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.