பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் பிரான்ஸில் அதிகரித்துள்ள நிலையில், அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது சுற்றுப்பயணங்களை இரத்து செய்துள்ளார். ஐரோப்பாவை பொறுத்தவரை, இத்தாலிக்குப் பின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.