Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 302, கேரளா – 241 தமிழ்நாடு – 124, டெல்லி – 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

 

Categories

Tech |