தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4,800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4, 800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29ஆக உயர்ந்துள்ளது
சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அதிபர் மூன் ஜேயிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியாவில் பல்வேறு இசை, கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே , ஊழியர்கள் சிலர் பலியானதால் மிகப்பெரிய நிறுவனங்களான சாம்சங், ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள், தங்களுடைய ஆலைகளை மூடியுள்ளன.டேகு பகுதியில், வைரஸ் பாதிப்பு அதிகமுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.
இதையடுத்து அங்குள்ள தோவலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்தப் பெண் பங்கேற்றுள்ளார். அதன் காரணமாக, அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சர்ச்சுடன் தொடர்புடைய, 2.60 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.