தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101 ஆக அதிகரித்துள்ளது
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் அடங்குவர்..
தமிழகத்தில் இன்று அதிகளவாக சென்னையில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது.. மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. இந்த 3 மாவட்டத்தை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் இன்று கொரோனா பாதிப்பு இல்லை..
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று யாரும் உயிரிழக்காததால் பலி எண்ணிக்கை 24 ஆக இருக்கிறது. இது கவலை தரும் செய்தியாக இருந்தாலும் கூட, இன்று ஒரே நாளில் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,020ல் இருந்து 1,101 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 838 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 809ஆக குறைந்தது . இந்த செய்தி தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது.. தினமும் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கூட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உயர்ந்து வருவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற அனைத்து பணியாளர்களின் உழைப்பே இதற்கு காரணம்..
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விவரம் இதோ: