Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியது

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை 22 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கேரளா டெல்லியில்  ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் உத்தரபிரதேசம், கர்நாடகா அடுத்தடுத்த வரிசையில் இருக்கின்றன.

அதேசமயம் தமிழகத்தில் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி அறிவித்துள்ளார். அதில் நாளை பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமானவை என நேற்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் நடத்திய கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |