கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் குடியேறி மிரட்டி வருகிறது.
இதனிடையே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.