இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது காட்டு தீயை போல வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் 75 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 213 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.