இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது
சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 396 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. முன்னதாக 360 ஆக இருந்த நிலையில் தற்போது 36 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Total number of #Coronavirus positive cases rises to 396 in India (including foreign nationals): Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/pIe0QmUI26
— ANI (@ANI) March 22, 2020