இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க வைத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ல் இருந்து 743 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 696 பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாட்டினர் ஆவர். அதேபோல பலியானோரின் எண்ணிக்கை 17 ல் இருந்து 18 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 135 பேரும், மகாராஷ்டிராவில் 130 பேரும், கர்நாடகாவில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், 46 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.