ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நாட்டின் டேஹுடி மாகாணத்தில் இருக்கும் நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவினால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன.
மேலும், சில பகுதிகளில் மக்களும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்தமீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிச்சரிவில் சிக்கித்தவித்த அப்பகுதி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மிரமூர் பகுதியில் 16 பேர், அச்டர்லேபகுதியீல் 5 பேர் என மொத்தம் பனிச்சரிவில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது அந்நாட்டு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.