Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 1556 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரசால் 2 லட்சத்துக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த கொடிய கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாததால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது.

சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் கொரோனா தீயாக பரவி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. சீனாவை விட பலி எண்ணிக்கை இத்தாலியில் அதிகரித்துள்ளது. இந்நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |