Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிப்பு!

சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள திருவிக நகர், கோடம்பாக்கம், ராயபுரம் , அண்ணா நகர், தேனாம்பேட்டை , தண்டையார் பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அடையாறு, திருவொற்றியூர், ஆலந்தூர், பெருங்குடி, மாதவரம், சோழிங்கநல்லூர், மணலி 15 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் தற்போது ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள 419 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 28 நாட்கள் பாதிப்பு இல்லாதா 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த 40 இடங்களிலும் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

Categories

Tech |