Categories
மாநில செய்திகள்

தமிழ் பேரறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது : சீமான் வேதனை 

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ் பேரறிஞர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது, தமிழ் கற்போரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அது அப்பனுக்கு மகன் செய்கின்ற கடமையை செய்தேன்.

இது என்னுடைய கடமை நான் செய்தேன், ஒவ்வொரு ஆண்டும் அப்பாவோட ( நெல்லை கண்ணன்) நினைவு தினத்திற்கு ஏதாவது செய்வேன். நான் எங்கே இருந்தாலும் அதை செய்வேன், அது என்னுடைய கடமை. நான் என் அப்பாவை வணங்கவில்லை, எங்க அப்பாவின் தமிழை வணங்குகிறேன். அவர் மறைந்து போக மாட்டார். எங்க அப்பாவின் ஒவ்வொரு பேச்சும் நிலைத்து நிற்கும்,  தமிழ் பேரினம் வாழும் வரை நிலைத்திருக்கும்.

காற்றில் மிதந்து வரும் இந்த தமிழோடு நம்மோடு இணைந்து என்றென்றைக்கும் நம் அப்பா ( நெல்லை கண்ணன் ) வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். அவருக்கு மரணமே கிடையாது. மரணம் என்பது என்ன? ஒருவர் மரணித்து போவதால் அவன் கொண்டிருந்த நோக்கமும் செயல்பாடுகளும் இறந்து போவது இல்லை என்கிறார் சேகுவேரா. அவன் முன்வைத்த முழக்கங்களும், நோக்கமும் இறந்து போகாது என்கிறார்கள். அவர் இறந்திருக்கலாம் ஆனால் அவர் நோக்கம் எங்கே இறந்து போய் இருக்கிறது. அவர் செயல்பாடு மறைந்திருக்கிறதா? அவர் முன்வைத்த நோக்கம் அப்படியே தான் இருக்கிறது.

Categories

Tech |