கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருக்கின்றது. அதேபோல ஈரானிலும் கொரோனா வைரஸ் காரணமாக 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 26 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து ஈரான் நாட்டில் இருந்து சென்றவர்களால் பரவிய நோய் தொற்று காரணமாக பஹ்ரைனில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.