செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே கீழே மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் டென்னிசி பகுதியை சேர்ந்த டிப்னி டோவர் என்ற செவிலியர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த செவிலியர் தடுப்பூசி குறித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர் பேசியுள்ளார். பின்னர் தன் தலையை பிடித்துக்கொண்டு i am sorry என்று கூறியவாறே மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போட்ட கொஞ்ச நேரத்திலேயே செவிலியர் மயங்கி விழும் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
A Tennessee nurse in the United State faints live on TV, minutes after getting Pfizer's COVID-19 Vaccine whilst having an interview with local News outlet News Channel 9.#sopupdates #Covid_19 #CovidVaccine pic.twitter.com/v48vRy5jHh
— Sop Updates (@sopupdates_) December 18, 2020