முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் கணேசன் (வயது 76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான வயலில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசனின் மகன் பாலாஜி மற்றும் உறவினர்கள் கணேசனை தேடி சென்றுள்ளனர்.
அப்போது கணேசன் 60 அடி ஆலமுல்ல கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கணேசனை பிணமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.