190 அடி குகைக்குள் சிக்கிய 2 முதியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தென்கொரியாவில் சிங் மைன் உடைப்பின் போது 56 மற்றும் 62 வயதுடைய 2 முதியவர்கள் பாதாள குழிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த 2 முதியவர்களும் 190 அடி குகைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் 9 நாட்களாக வெறும் காபித்தூளை மட்டும் கலக்கி குடித்து அவர்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். இவர்களை தற்போது மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்நிலையில் 2 முதியவர்களையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 190 அடி குகைக்குள் இறங்கி இரண்டு முதியவர்களையும் மீட்டது மிகவும் சவாலாக இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.