Categories
சேலம் மாநில செய்திகள்

“மக்களோடு மக்களாக நின்ற முதலவர்” சேலத்தில் வாக்கு செலுத்தினார்…!!

சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர்  வரிசையில் நின்று  வாக்களித்தார்.

தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித், விஜய் , சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெற்ற  சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டன.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார். அவர் சாலையில் தனி ஆளாக நடந்து வந்து வாக்களித்த பின்னர் வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காட்டினார். தொடர்ந்து தமிழகத்தில் பல அரசியல் பிரபலங்கள் என தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Categories

Tech |