Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

“மக்களுக்கு சிகிச்சை அளித்தவர்” விரைவில் நலம் பெறுவார்…. ஸ்டாலின் பதிவு…!!

தன் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “தனது இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை கொடுக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை கொடுக்கிறது. தன்னுடைய இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைந்து முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்.” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |