தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் விஷால் நற்பணி மன்றம் சார்பில் சேலம் மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், அதில் விஷால் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு நபர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.
அதன் பிறகு உழைத்து கை நிறைய சம்பாதிக்கும் பணம் மட்டுமே ஒருவருக்கு உதவும். சூதாட்டம் போன்ற தவறான வழிகளில் வரும் பணம் ஒருபோதும் நிலைக்காது. மேலும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் என்னை நடிக்க அணுகினார்கள். ஆனால் நான் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து விட்டேன். ஆனால் சிலர் ஆன்லைன் சூதாட்டத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக இருக்கிறார்கள் என்று கூறினார்.