அமைச்சர்கள் வீட்டுக்கு குடிநீர் எப்படி வருகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் OPS சென்ற நிலையில் அட்டகாசமாக EPS பதிலளித்ததாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் வீதிகளில் திரிகின்றதை நாம் பார்க்கமுடியும். இந்நிலையில் மக்களுக்கு தண்ணீர் இல்லை ஆனால் அமைச்சர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. லாரி மூலம் தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்.
இது குறித்து துணை முதல்வரிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதிலளிக்காமல் சென்றது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதே கேள்வி தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரிடம் கேட்டகப்பட்ட போது , உங்களுக்கு எங்கிருந்து வருகின்றதோ அதே போல தான் அமைச்சர்களுக்கு தண்ணீர் வருகின்றது என்று பதிலளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் , அமைச்சர்கள் வீடுகளில் 4 பேர் இருப்பார்கள் எதற்க்காக 2 லாரி தண்ணீர். அமைச்சர் வீடுகளுக்கு , என்னுடைய வீட்டுக்கு அரசு அதிகாரிகள் வருவார்கள் , ஆலோசனை நடக்கும். ஏன் நீங்க கூட பேட்டி எடுக்க வருவீங்க..அப்போது எதாவது உணவு கொடுக்க வேண்டும்.ஏதும் தர்லைன்னா என்ன சொல்லுவீங்க. முதல்வர் தண்ணீர் கூட கொடுக்கல என்று சொல்லுவீங்க தான என்று நகைச்சுவையுடன் பேசினார்.
முதல்வரின் இந்த பேச்சால் செய்தியாளர்கள் நிகழ்வு கலகலப்பாக இருந்தது. துணை முதல்வர் பதிலளிக்காமல் சென்ற அதே கேள்விக்கு முதல்வர் நகைச்சுவையாக பதிலளித்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஓ.பன்னீர்செல்வத்தை ஆளுமை மிக்க தலைவர் என்று சொல்ல வைத்துள்ளது.ஒரே கேள்வியில் OPS அவுட் ஆன நிலையில் EPS சிக்ஸ்ச்ர் அடித்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் புகழ்ந்து வருகின்றனர்.