Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS, OPS அறிக்கை.. ”சோலி முடிந்தது திமுக” … அதிமுக அதிரடி …..!!

அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக OPS , EPS விடுத்துள்ள அறிக்கையில் திமுக ஆடி போயுள்ளது.

செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.15ஆம் விருக்கபக்கத்தில்  நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் , சோழிங்கநல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உரை ஆற்றுகின்ற்றார் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் தமிழகம் , புதுச்சேரி , கர்நாடகா , ஆந்திரா , கேரளா , டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.குறிப்பாக திமுகவை அதிமுகவின் முடிவை கண்டு ஆடிப்போயுள்ளது. அதிமுக சார்பில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் பொதுக்கூட்டம் நடத்தி வந்தநிலையில் இந்த முறை தலைநகர் டெல்லி உட்பட 5 மாநிலத்தில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்ட்டுள்ளது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம் இந்திய அரசியல் கட்சிகளை பிரமிக்க வைத்தது. தேசிய கட்சிகளே முன்னெடுக்காத ஒரு விஷயத்தை மாநில கட்சியான திமுக எடுத்ததே அந்த பிரமிப்புக்க்கு காரணம்.குறிப்பாக ஜம்முவில்  சிறைபிடித்துள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்று  தேசியளவிலான அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்தது டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது தேசிய அரசியலில் ஸ்டாலினை ஒரு தளபதியாக காட்டியது.

இந்நிலையில் இன்று காலை 13 நாட்கள் வெளிநாட்டு சுற்று பயணத்தை முடித்து தமிழகம் வந்த எடப்பாடி , துணை முதல்வர் OPS ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தளபதி ஸ்டாலினை கடுமையாக பின்னுக்கு தள்ளியுள்ளது. டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கு தளபதியாக இருந்த ஸ்டாலின் கதையை அதிமுகவின் ஒரே அறிக்கை முடித்துள்ளது. திமுக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிமுக அண்ணா பொதுக்கூட்டத்தை 5 மாநிலத்தில் நடத்த போவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |