Categories
அரசியல் மாநில செய்திகள்

போட்டோ மட்டும் தான்… ”சம்மந்தமே இல்லாதவர்கள்” ….. சீமானை கலாய்த்த கருணாஸ் ….!!

இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்று சீமானை விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.மேலும் சீமானின் சர்சை பேச்சு குறித்து விக்கிரவாண்டி பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு பகுதியில் சீமானுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் , சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறுகையில் , பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்ததை வைத்துக்கொண்டு அனைத்தையும் முன்னின்று நடத்தியதாக சிலர் கூறுகின்றனர். இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்று சீமானை விமர்சித்துள்ளார்.

 

Categories

Tech |