இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நீதிபதிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கேகே வேணுகோபால நோக்கி கழிவுநீர் உள்ளிட்டவற்றை இறங்கி சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு முகமூடிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏன் வழங்கப்படுவது இல்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் உலகில் வேறு எந்த நாட்டிலும் கழிவுநீர் ஓடைக்குள் உயிரிழக்க மனிதர்கள் அனுப்ப படுவதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த முறையினால் நாட்டில் மாதம்தோறும் நான்கு முதல் ஐந்து பேர் வரையில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.