Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

மாஸ் காட்டிய தொடக்க ஜோடி….. 16 ஓவருக்கு 154 ரன்…. ஆஸி அணி கலக்கல் ….!!

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசதியுள்ளனர்.

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தியது. சிக்ஸர் , பவுண்டரி என பறக்க விட்ட ஹீலி 39 பந்துகளில் 7 பவுண்டரி , 5 சிசிக்சருடன் 75 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

 

பின்னர் 2 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆஸி அணியின் கேப்டன் மெக் லென்னிங்குடன் ஜோடி சேர்ந்த மோனியும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்து ஆடி வருகின்றது. அந்த அணியின் மோனி 45 பந்தில் 8 பவுண்டரி அடித்து 60* ரன்னுடனும் , கேப்டன் மெக் லென்னிங் 13 பந்தில் 2 பவுண்டரி அடித்து 16 ரணனுடன் களத்தில் உள்ளனர்.

 

Categories

Tech |