மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதி வருகின்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி அணியின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தியது. சிக்ஸர் , பவுண்டரி என பறக்க விட்ட ஹீலி 39 பந்துகளில் 7 பவுண்டரி , 5 சிக்சருடன் 75 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோனி 41 பந்தில் அரைசதம் அடித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆஸி அணியின் கேப்டன் மெக் லென்னிங் 16 ரன்னுடனும் , 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கார்ட்னர் 2 ரன்னுடனும் தீப்டி சர்மா ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹெய்ன்ஸ் 4 ரன்னில் பூனம் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அரைசதம் கடந்ததும் அதிரடியை வெளிப்படுத்திய மோனி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணியின் ரன் சீரான வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் குவித்து அசத்தியுள்ளது. அந்த அணியின் மோனி 54 பந்தில் 10 பவுண்டரி அடித்து 78* ரன்னுடனும் , நிக்கோலா ஹரி 5 பந்தில்4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டும் , பூனம் யாதவ் , ராதா யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இந்திய அணிக்கு 185 என்ற கடினமான இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.