Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்…. கைநழுவி செல்லும் படங்கள்…. பெரும் கலக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்பள விஷயத்தில் கறராக இருப்பது மற்றும் படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக நடந்து கொள்வது போன்ற பல்வேறு புகார்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது எழுந்துள்ளது.

இதனால் தங்களுடைய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கரின் மீது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கவனம் திரும்பியுள்ளது. இவருடைய கையில் தற்போது ஏராளமான படங்கள் கைவசம் இருக்கிறது. அதன் பிறகு  நடிகை பிரியா பவானி சங்கர் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார்.

கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்ளுதல் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் எளிமையாக நடந்து கொள்ளுதல் போன்ற காரணங்களால் தான் பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிகிறதாம்‌. அதோடு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் பிரியா பவானி சங்கருக்கு போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இடத்தை தற்போது பிரியா பிடித்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இதன் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும் கலக்கத்தில் இருக்கிறாராம்.

Categories

Tech |