சேலம் மாவட்டத்தில் வெடி விபத்துக்கு காரணமான கல் குவாரி உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிச்சிப்பாளையம் பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கந்தாஸ்ரமம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அத்தனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் குமார் என்ற இருவரும் கல் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாறையை தகர்க்க வைத்திருந்த வெடி தீடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் விபத்தில் இறந்த சுரேஷை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த விபத்திற்கு காரணமான கல் குவாரி உரிமையாளர் அர்ஜூனனை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.