துணி கடைகள் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்கள் சிறப்பு பூஜைகளுடன் தற்போது விற்பனையை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதில் தற்போது பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளில் துணி கடை மற்றும் நகை கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தர்மபுரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் துணிக்கடை மற்றும் நகைகடைகளில் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீதம் கொண்ட வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.
இதனால் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் துணிக்கடை மற்றும் நகைகடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடைகள் திறக்கப்பட்டதினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருமணம் உள்ளிட்ட பல சுபநிகழ்ச்சிகளுக்கு துணிகள் மற்றும் நகைகள் வாங்க சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இம்மாவட்டத்தில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் மற்றும் 175 நகைக்கடைகளை உரிமையாளர்கள் திறந்து வியாபாரத்தை சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பித்துள்ளனர். அதன்பின் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே உள்ளே சென்று பொருட்களை வாங்க அனுமதித்துள்ளனர். மேலும் இக்கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.